டாட்டூபோட்டு நடிப்பதென்றால் அல்வா சாப்பிடுவதுபோலத்தான்.. டாப்ஸி சொல்கிறார்..

Taapsee Pannu shares throwback photo of tattoo

தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு டாட்டூ பிரியை. தனது உடம்பில் கழுத்து உள்ளிட்ட சில இடங்களில் நிஜ டாட்டூக்கள் வரைந்திருக்கிறார்.

திரைப்படங்களில் தனது கதாபாத்திரங்களுக்கு டாட்டூ போட்டுநடிக்க வேண்டுமென்றால் அல்வா சாப்பிடுவது போல் ஆர்வமாக ஒப்புக்கொள்கிறார்.
கொரோனா ஊரடங்கில் தங்கையுடன் தனது வீட்டில் இருக்கும் டாப்ஸி அவ்வப்போது படங்களில் டாட்டூபோட்டு நடித்த காட்சிகள் பற்றி வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே பிங்க் இந்தி படத்தில் நடித்தபோது கழுத்தில் டாட்டூவுடன் நடித்த காட்சிபற்றி கூறியிருந்தார். சமீபத்தில் அதே டாட்டூவை நிரந்தரமாக போட்டுக்கொண்டார். தற்போது மற்றொரு டாட்டூ கதாபாத்திரம்பற்றி பழைய நினைவைப் பகிர்ந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, கேம் ஓவர் என்ற படத்துக்காக இடது கை மணிக்கட்டு அருகே டாட்டூபோடு நடிக்க வேண்டும். அந்த படத்தில் அது எனக்கு முக்கியமான ஆபரணம். நிஜத்திலேயே நான் ஒரு டாட்டூ பிரியை. பட கதாபாத்திரத்தில் டாட்டூ என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால் அதை காட்சி முடியும் வரை அழியாமல் பார்த்துக்கொள்வது மிகவும் சிரமமான விஷயமாக இருந்தது. அதுவும் சென்னை வெயிலில் படப்பிடிப்பு நடந்த போது மிகவும் சிரமமாக இருந்தது என்றார்.

You'r reading டாட்டூபோட்டு நடிப்பதென்றால் அல்வா சாப்பிடுவதுபோலத்தான்.. டாப்ஸி சொல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனாவிலும் இயங்கும் ஒபன் தியேட்டர்.. ஒரு டிக்கெட் 3700 ரூபாய்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்