சாந்தனு பாக்யராஜ் இயக்கிய கொரோனாகுறும்படம்..

Shanthnu Bhagyaraj the team of KOCONAKA

டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு முதன்முறையாக குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அனைவருக்கும் ஷாந்தனு - கிக்கியின் நன்றி கலந்த வணக்கம்
“Its Better to Light One Candle than to Curse the Darkness” இது என் அப்பவோட லெட்டெர்பேட்ல வர்ற அவருக்கு ரொம்ப பிடித்த வாசகம். கொரோனா பாதிப்புல உலகமே ஸ்தம்பிச்சு தவிச்சிட்டிருக்கு. நம்ம மத்திய மாநில அரசுகள், பல்வேறு துறையைச் சேர்ந்த நிறைய விஐபி.க்கள் விழிப்புணர்வு உருவாக்குவதற்காக, அவங்கவங்க பங்குக்கு மீடியாக்கள் மூலம் பல நல்ல விஷயங்களை பதிவு பண்ணிட்டுருக்காங்க. என் பங்குக்கும் சின்னதாக ஒரு நல்ல விஷயம் பதிவு பண்ண யோசிச்சேன்.
பாக்யராஜ் புள்ள நடிக்கிறேங்கிறதவிட கதை எழுதி டைரக்ட் பண்ணி ஒரு குறும்படமா வெளியிட்றதுதான் பெருமையான விஷயமா மனசுக்கு பட்டது. அது அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப ரொம்ப சந்தோஷப் படுத்துமுன்னு தோணுச்சு. கன்னிமுயற்சியா ஒரு சின்ன விஷயம் யோசனை பண்ணி கிக்கியுடன் சேர்ந்து, DADSON Pictures என்னும் பெயரில் வீட்டு லைட்டு வெளிச்சத்துல, செல்போன்லயே அதை எடுத்து (KOCONAKA) “கொஞ்சம் கொரோனா நெறைய காதல்” அப்பிடிங்ற டைட்டிலோட யூடியூப் சேனலில் (With Love Shanthnu Kiki) வெளியிட்டேன் (லேசான ஷிவரிங்குடன்). ஆனா அது உங்க பேராதரவுனாலயும் மரியாதைக்குரிய தமிழ் மக்கள் பேராதரவுனா லயும் ஒரு பெரிய மரியாதையை வாங்கிக் குடுத்துருச்சு. இதுவரைக்கும் 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும் பார்த்து ரசிச்சிருக்காங்க. ரசனை தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கு. கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம், கடமை உணர்ச்சியோட மீண்டும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்.
இவ்வாறு சாந்தனு பாக்யராஜ் கூறி உள்ளார்.

You'r reading சாந்தனு பாக்யராஜ் இயக்கிய கொரோனாகுறும்படம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிவி படப்பிடிப்பு நடத்தத் தமிழக அரசு அனுமதி.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்