ஜோதிகா பட டிரெய்லரை வெளியிட்ட சூர்யா..

The trailer of Jyotikas Ponmagal Vandhal was unveiled by Suriya

நடிகை ஜோதிகா நடித்திருக்கும் புதிய படம் பொன்மகள் வந்தாள். சூர்யா தயாரித்திருக்கிறார். ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கி உள்ளார். இப்படம் அமேசான் பிரைமில் வரும் 29ம் தேதி நேரடியாக ஒளிபரப்பாகிறது. முன்னதாக இப்படத்தின் டிரெய்லரை சூர்யா தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார்.

வழக்கறிஞராக ஜோதிகா நடித்திருக்கும் இப்படத்தில் கே.பாக்யராஜ். தியாக ராஜன், பிரதாப்போத்தன், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சிறுமிகளைக் கடத்தி கொல்லும் சம்பவத்தை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கோர்ட் காட்சிகள் பிரதானமாக இடம்பெறுகிறது

You'r reading ஜோதிகா பட டிரெய்லரை வெளியிட்ட சூர்யா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோகன்லால் நடிக்கும் த்ரிஷ்யம் 2

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்