தள்ளுவண்டியில் பழம் விற்று பிழைப்பு நடத்தும் நடிகர்.. ஷூட்டிங் இல்லாததால் வருமானம் இல்லை..

actor Solanki Diwaka sells fruits on streets

பெரிய நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு இல்லாவிட்டாலும் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே பொழுதைக் கழிக்க முடிகிறது. அன்றாடம் சம்பளம், பேட்டா வாங்கி குடும்பத்தை நடத்தும் துணை நடிகர், நடிகைகள் வாழ்க்கை திண்டாட்டம் ஆகியிருக்கிறது.பாலிவுட் படங்கள் டிட்லி, சொன்சிரிய மற்றும் டிரீம்கேர்ள் போன்ற படங்களில் நடித்தவர் சோலன்கி திவாகர். இவர் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இன்றி தவித்தார். தற்போது டெல்லி வீதிகளில் தள்ளுவண்டியில் பழங்களை வைத்து விற்றுப் பிழைப்பை ஓட்டுகிறார்.


இதுபற்றி அவர் கூறும்போது,சினிமாவில் எந்த வேலையும் இல்லை. இதனால் கையில் பணம் இல்லை. இப்படியே இருந்தால் கொரோனா வைரஸால் இல்லாவிட்டாலும் பசியே என்னையும் என் குடும்பத்தையும் கொன்றுவிடும். லாக் டவுன் தொடர்வதால் எனது தேவைகளைச் சமாளிக்க வேண்டி உள்ளது. வீட்டு வாடகை தரவேண்டும், குடும்பத்தினருக்கு உணவு அளிக்க வேண்டும். எனவே தான் தள்ளுவண்டியில் பழங்களை விற்றுப் பிழைப்பை நடத்துகிறேன். ஊரடங்கு முடிந்த பின் படப்பிடிப்புகள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் சோலன்கி

You'r reading தள்ளுவண்டியில் பழம் விற்று பிழைப்பு நடத்தும் நடிகர்.. ஷூட்டிங் இல்லாததால் வருமானம் இல்லை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதல்வரை சந்தித்த டோலிவுட் சூப்பர் ஸ்டார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்