அரவிந்த்சாமி நடித்த நரகாசூரன் என்னாச்சு? வரும் ஆனா வராது..

Karthick Nareans update on Naragasooran

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய படம் நரகாசூரன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப்கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பைனான்ஸ் பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் முடங்கியிருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்திருந்த கார்த்திக் நரேன், மார்ச் மாதம் படம் வெளியாகும் என்று கூறியிருந்தார். ஆனால் கொரோனா லாக் டவுனால் படத்தின் ரிலீஸ் பாதிக்கப்பட்டது.

தற்போது படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அவரை தொடர்ந்து கேட்டு வருவதுடன் தியேட்டர்கள் திறக்க அதிக காலம் ஆகும் பட்சத்தில் ஒடிடி தளத்திலாவது படத்தை வெளியிடுங்கள் என்று கேட்டு வருகின்றனர். அதற்குப் பதில் அளித்திருக்கும் அவர், படம் வரும் ஆனா வராது என்ற பாணியில் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, நரகாசூரன் வெளியாகும் ஆனால்.. என்று சஸ்பென் ஸுடன் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா படம் வெளியானது இதில் அருண் விஜய், பிரசன்னா நடித்திருந்தனர் அடுத்த தனுஷ் நடிக்கும் 43வட்து படத்தை இயக்க உள்ளார். ஜீவி.பிரகாஷ் இசை அமைக்கிறார்,

You'r reading அரவிந்த்சாமி நடித்த நரகாசூரன் என்னாச்சு? வரும் ஆனா வராது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தலைவன் இருக்கிறான் பட பாடல் பதிவில் பூஜாகுமார்.. கமல், விஜய்சேதுபதி, ரஹ்மான் இணையும் படம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்