அசுரன் நாயகியின் கலக்கல் உருமாற்றம்.. இமயமலை பனியில் சாதனைக்கு தயார் ஆகிறார்.

Manju Warrier looks stylish in the Ahr poster

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அசல் கிராமத்துப் பெண்ணாக மாறுபட்ட வேடத்தில் நடித்தவர் மஞ்சுவாரியர். தற்போது அவர் அப்படியே நேர் எதிரான தோற்றத்துக்கு மாறி இமயமலையில் பனி படர்ந்த சிகரங்கள் மீது படமாக உள்ள அர் என்ற புதிய மலையாள படத்தில் நடிக்கிறார். அதற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. இது மஞ்சு வாரியர்தானா என்று கேட்கும் அளவுக்கு ஜீன்ஸ்பேன்ட், குளிர்பிரதேச கோட் கூலிங் கிளாஸ் அணிந்து அசத்தலாக ஸ்டைலில் போஸ் தந்திருக்கிறார்.

பனிமலையில் ஏறி சாதனை படைக்கும் பெண்ணாக இதில் நடிக்கிறார் மஞ்சு.இப்படத்தை சனல் குமார் இயக்குகிறார். 3 தயாரிப்பாளர்களில் ஒருவராக மஞ்சுவாரியரும் இதில் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார்.

You'r reading அசுரன் நாயகியின் கலக்கல் உருமாற்றம்.. இமயமலை பனியில் சாதனைக்கு தயார் ஆகிறார். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேட்டூர் அணை திறக்கும் முன் தூர்வாரும் பணியை முடிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்