துல்கர் நடிக்கும் குரூப்.. ரூ35 கோடியில் உருவான படம்..

Dulquers Kurup Release in theatre

பெரிதும் எதிர்பார்க்கப்படும் துல்கரின் 'குரூப்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மட்டும் விழாக்கால பரிசாக இப்போது வெளியாகியிருக்கிறது. துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் இப்படம் உருவாகியிருக்கிறது.

ஸ்ரீநாத் ராஜேந்திரனின் 'குரூப்' படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர், ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. கோட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் குரூப்பாக காட்சியளிக்கிறார் துல்கர். தப்பிப் பிழைத்த பிரபலம் அல்லாத சுகுமார் குரூப்பின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், நடப்பு வாரத்திலேயே வெள்ளித் திரையில் வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக வெளியீடு தள்ளிப் போய்விட்டது.

துல்கர் நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துல்கரின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் ஃபிலிம்ஸ், எம்.ஸ்டார் என்டர்டெயின் மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து 'குரூப்' படத்தைத் தயாரித்திருக்கிறது. இந்தியாவில் கேரளா, அகமதாபாத், மும்பாய், பெங்களூரு, மங்களூர் மற்றும் மைசூர் ஆகிய இடங்களிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. ஜிதின் கே.ஜோஸ் கதை வசனம் எழுதியிருக்கும் இப்படத்துக்கு டேனியல் செயூஜ் நாயர் மற்றும் கே.எஸ்.அரவிந்த் திரைக் கதை அமைத்திருக்கின்றனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சுஸின் ஷ்யாம் இசையமைத்திருக்கிறார்.

குரூப் படத்தின் கிரியேடிவ் டைரக்டர் பொறுப்பு ஏற்றிருப்பவர் வினி விஷ்வா லால். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பைக் கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பை பங்லான் செய்திருக்கிறார்.ஷோபிதா துலிப்பாலா நாயகியாக நடித்திருக்கும் குரூப் படத்தில் இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ, விஜய ராகவன், பி.பாலசந்திரன், சுரபி லட்சுமி மற்றும் சிவாஜித் பத்மநாபன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். பிரவீன் சந்திரன் பிரதான இணை இயக்குநராகப் பணியாற்ற, விக்னேஷ் கிஸன் ராஜீஷ் ஒலி வடிவமைப்பைக் கவனிக்கிறார்.பின் தயாரிப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கும் குரூப் படம், திரையுலகம் தன் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் அரங்குகளுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

You'r reading துல்கர் நடிக்கும் குரூப்.. ரூ35 கோடியில் உருவான படம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி அறிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்