ஒ டி டி தளத்தில் 7 தமிழ் படங்கள் நேரடி ரிலீஸ்..

Seven Tamil films that chose OTT over theatrical release

ஜோதிகா நடிக்கும் 'பொன்மகள் வந்தாள் ' கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில் அமேசான் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியாகிறது. இது தவிர மேலும் ஐந்து புதிய படங்கள் நேரடி ரிலீஸ் பற்றியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாகவே இதேபோல் தியேட்டரில் வெளியாகாமல் 7தமிழ்ப் படங்கள் ஒ டி டி தளத்தில் வெளியாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.அதன் விவரம் வருமாறு :
பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த சில சமயங்களில், டைரக்டர் விஜய் ஜெயபால் இயக்கிய முபி, ஹரி விசுவநாதன் இயக்கிய ரேடியோ பெட்டி, முரளி கார்த்திக் இயக்கிய களவு. இதில் கலையரசன், கருணாகரன் நடித்துள்ளனர். அருண் கார்த்திக் இயக்கிய சிவபுரம், அருண் ரவிச்சந்திரன் இயக்கிய செத்தும் ஆயிரம் பொன் மற்றும் வெங்கட் பிரபு தயாரித்த ஆர் கே நகர் ஆகிய படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் ஒ டி டி தளங்களில் வெளியாகி இருக்கின்றன.

You'r reading ஒ டி டி தளத்தில் 7 தமிழ் படங்கள் நேரடி ரிலீஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காப்பான் பட வெட்டுக்கிளி தாக்குதல் நிஜமானது.. 50 ஹெக்டேர் பயிர்கள் அழிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்