நடிகை மகனுக்கு சரமாரி வெட்டு.. போலீசார் விசாரணை..

Actress Maya son attacked

80, 90களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார்.சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசிக்கிறார். நேற்று இரவு விக்னேஷ் வீட்டிற்குள் புகுந்த வந்த 8 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு கும்பல் தப்பிச் சென்றது.

ரத்த வெள்ளத்தில் துடித்த விக்னேசை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு உடலில் 40 தையல்கள் போடப்பட்டன விருகம்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading நடிகை மகனுக்கு சரமாரி வெட்டு.. போலீசார் விசாரணை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யுவன் ஷங்கர் ராஜாவை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியது ஏன்? மனைவி ஸப்ரூன் நிசாரிடம் கேள்வி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்