சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் முற்றுகிறது.. நல்ல மனமிருந்தால் முட்டாள் என்று நினைக்காதே..

Samantha Take A Dig At Pooja Hegde

நடிகை சமந்தாவுக்கும், அல்லு அர்ஜுனுடன் அலவைகுந்தபுரம் தெலுங்கு படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு சமந்தாவின் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பூஜா,சமந்தா ஒன்றும் அவ்வளவு அழகில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். அதைக் கண்ட சமந்தா ரசிகர்கள் பூஜாவை சகட்டுமேனிக்கு டோஸ் விட்டதுடன் சமந்தாவிடம் பூஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.

ஆனால் பூஜாவோ தனது இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக் செய்து அதில் மெஜேஜ் பகிர்ந்து விட்டதாகக் கூறினார். சமந்தாவிடம் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை.
பூஜாவின் விமர்சனத்துக்கு நேரடியாகப் பதில் அளிக்காத சமந்தா மறைமுகமாக அவரது பெயரைக் குறிப்பிடாமல் தாக்கி வருகிறார். இதற்கிடையில் இந்த பிரச்சனை குறித்து தனது தோழிகள், நண்பர்களிடம் அவர் ஆலோசித்தார். சமந்தாவுக்கு ஆதரவாகப் பாடகி சின்மய் மெசேஜ் பகிர்ந்து வருகிறார்.

இதற்கிடையில் சமந்தா வெளியிட்டுள்ள ஒரு மெசேஜில், நல்ல மனம் கொண்டவர்களுக்கு மற்றொரு பிரச்சனை அவர்களை மற்றவர்கள் முட்டாள்கள் என்று நினைத்துவிடுகிறார்கள். அப்படி நினைத்தால் அது தவறு என குறிப்பிட்டிருக்கிறார். இது பூஜாவுக்கு சமந்தா விடுத்துள்ள எச்சரிகையாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்து சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் முற்றத்தொடங்கி இருக்கிறது. பூஜா ஹெக்டே அல வைகுந்த புரம் படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடித்த புட்டா பொம்மா பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அந்த பெயரைத் தக்க வைத்துக்கொள்ளவே சமந்தாவுடன் மோதல் போக்கை ஏற்படுத்தும் பரபரப்பை கடைப்பிடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

You'r reading சமந்தா, பூஜா ஹெக்டே மோதல் முற்றுகிறது.. நல்ல மனமிருந்தால் முட்டாள் என்று நினைக்காதே.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை பூனம் கவுர் யாரை தாக்குகிறார்.. உன்னை விட விலைமாதுவே மேல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்