தலைவா பட இயக்குனர் விஜய் தந்தையானார்.. லாக் டவுனில் பிறந்த ஆண்குழந்தை..

Director AL Vijay blessed with a baby

விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் போன்ற படங்களை இயக்கிய ஏஎல் விஜய் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்தை இயக்கி வருகிறார். இதில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடித்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன் ஏ.எல்.விஜய் நடிகை அமலாபாலை மணந்தார். இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டதையடுத்து சட்டப்படி விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யாவை மறுமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யா கர்ப்பம் ஆனார். லாக்டவுன் காலமான நேற்று விஜய், ஐஸ்வர்யா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தான் சித்தப்பா ஆகிவிட்டதாக நடிகர் உதயா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவர் இயக்குனர் ஏஎல்விஜய்யின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தம்பதிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

You'r reading தலைவா பட இயக்குனர் விஜய் தந்தையானார்.. லாக் டவுனில் பிறந்த ஆண்குழந்தை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாட்டு, நடன திறமையைத் தேடும் நடிகைகள்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்