கொரோனா ஊரடங்கு பற்றி காட்சிப் படம்.. பரத் பாலா இயக்கி உள்ளார்..

Bharathbalas India Lockdown Short film Meendum Ezhvom

இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது. வரும் தலை முறைகளுக்கு எடுத்துச் சொல்ல இயக்குனர் பரத் பாலா குறும்படம் இயக்கியுள்ளார்.இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து 'வந்தே மாதரம்', 'ஜன கன மன', மேலும் ஜியோ உடோ படோ ஜீதோ, காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ காணொலி என அனைத்துமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.கொரோனா ஊரடங்கை 'மீண்டும் எழுவோம்' என்ற பெயரில் ஆவணப்படுத்தியுள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இது சாத்தியமாகி உள்ளது. இயக்குனர் பரத் பாலாவும், அவருடைய 117 பேர் கொண்ட 15 குழுக்களும் இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை தங்கள் கேமராக்களில் காட்சிகளாகச் படம் பிடித்துள்ளனர்.
கண்ணுக்குத் தெரியாத ஒரு நோய்த் தொற்றால் இந்தியா எப்படி முழுமையாக ஸ்தம்பித்தது என்பதை இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.

இப்படப்பிடிப்புக்கான தலைமை கட்டுப்பாட்டு அறை மும்பையில் அமைத்து அங்கு ஒரு குழு வாரத்தின் அனைத்து நாட்களும் பூட்டப்பட்டே இருந்தனர். 14 மாநிலங்களில் பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்துப் படம்பிடித்த காட்சிகள் அனைத்தையுமே இந்த குழுவினர் ஒருங்கிணைத்தனர். களத்திலிருக்கும் குழுக்கள் வாட்ஸ்-அப் வீடியோ கால், ஜும் செயலி உள்ளிட்ட தொழில்நுட்ப வாயிலாக பரத் பாலாவைத் தொடர்பு கொண்டு இதனைப் படமாக்கினர். தேவைப்படும் காட்சி களை இங்கிருந்து கூற அதனைப் படக்குழுவினர் முழுக்க தொழில்நுட்ப வாயிலாகவே இந்தியா முழுக்கவே காட்சிப்படுத்தி சாதனை புரிந்துள்ளனர்.

4 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப் படம் இந்தியாவின் கொரோனா ஊரடங்கை எடுத்துரைக்கும் இதற்கு 'மீண்டும் எழுவோம்' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட ஊரடங்கிலிருந்து, பொருளாதார இழப்பிலிருந்து எப்படி மீண்டு வந்துள்ளோம் என்பதை வரும் தலைமுறையினர் உணரும் வகையில் இதனை வரும் 6ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.இந்த தகவலை விர்டுவல் பரத் நிறுவனம் தெரிவித்துள்ளது.

You'r reading கொரோனா ஊரடங்கு பற்றி காட்சிப் படம்.. பரத் பாலா இயக்கி உள்ளார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 40 ஆயிரம் பாடல்கள் பாடிய எஸ்.பி.பிக்கு பிறந்தநாள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்