மும்பையில் படப்பிடிப்புக்கு அனுமதி.. அமிதாப், மிதுன் நடிக்க முடியாது?

Permission to shoot in Mumbai: Amitabh, Mithun Cant Act?

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடத்த முடியாமல் 60 நாட்களுக்கும் மேலாக முடங்கி இருக்கிறது, மகாராஷ்டிரா அரசு டி,வி மற்றும் சினிமா படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்க வேண்டும் 65 வயதான நடிகர் , நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கக் கூடாது என விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


65 வயது நடிகர்கள் பங்கேற்கக் கூடாது என்ற விதியை ஏற்க திரையுலகினர் மறுத்துள்ளனர். அந்த விதியை ஏற்றால் 65 வயதைக் கடந்த அமிதாப்பச்சன், மிதுன் சக்கரவர்த்தி, அனுபம்கேர், ஷக்தி கபூர், நசுருதீன் ஷா, சுபாஷ்கை, மகேஷ்பட், சேகர் கபூர், மணிரத்னம், பிரியதர்ஷன் எனப் பலர் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது. எனவே இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

You'r reading மும்பையில் படப்பிடிப்புக்கு அனுமதி.. அமிதாப், மிதுன் நடிக்க முடியாது? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 17000ம் குடும்பத்துக்கு விஜய் தேவரகொண்டா அறக்கட்டளை உதவி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்