தளபதி 65 அப்டேட்: விஜய்யுடன் நடிக்கும் விஜய்சேதுபதி ஹீரோயின்..

Madonna Sebastian to play a key role in Thalapathy 65?

தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை ஏஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இது துப்பாக்கி படத்தின் 2ம்பாகமாக இருக்குமென்று தகவல் வெளியானது. எஸ்.தமன் இசை அமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். அவருடன் மற்றொரு ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.

இவர் விஜய் சேதுபதி ஜோடியாக காதலும் கடந்து போகும் மற்றும் ஜூங்கா படங்களில் நடித்தவர். நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' கொரோனா லாக்டவுனால் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் தளபதி 65பட தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. விஜய் பிறந்த தினத்தில் இப்படங்களின் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.

You'r reading தளபதி 65 அப்டேட்: விஜய்யுடன் நடிக்கும் விஜய்சேதுபதி ஹீரோயின்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாலிவுட் தயாரிப்பாளர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம்.. ஜிதேந்திரா - ரேகாவை வைத்து படம் எடுத்தவர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்