பற்ற வைத்த நெருப்பொன்று உடன் வரும் தடம் நடிகை..

Thadam Actress Smiruthi in Parravaiththaneruppondru

இருவர் பிலிம் பேக்டரி என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வினோத் ராஜேந்திரன் இயக்கி, தயாரித்திருக்கும் படம் " பற்ற வைத்த நெருப்பொன்று ". இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார் புதுமுகம் தினேஷ். அருண் விஜய்யுடன் 'தடம்' படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்த ஸ்மிருதி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் புதுமுகங்கள் அபிலாஷ், மாரிஸ், ஹரி, ரஞ்சித், திரு ஆகியோர் நடித்துள்ளனர்.நூதன சைபர் திருட்டு, டெலிவரி நெட்வொர்க் மூலம் நடக்கும் தீமைகளையும், சமூக விரோத செயல்கள் மையமாக வைத்துப் படத்தை புது இயக்குனர் வினோத் ராஜேந்திரன் டைரக்டுசெய்கிறார்.கிழக்கு கடற்கரைச் சாலை, பழவேற்காடு, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50 நாட்களுக்கும் மேலாகப் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் திரைக்கு வரவுல்ல இப்படத்தின் டீஸரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனன், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் சமூக வலைத் தளங்களில் இதனைப் பகிர்ந்துள்ளனர். சூர்ய பிரசாத்தின் இசை அமைக்கிறார். சுரேஷ் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார். தீபக் துவாரகநாத் எடிட்டிங் செய்கிறார். பட ஆடியோ உரிமத்தை டிவோ மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

You'r reading பற்ற வைத்த நெருப்பொன்று உடன் வரும் தடம் நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்.. 39 வயதில் நடிகை மேக்னாவுக்கு அதிர்ச்சி தந்த கணவர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்