காமெடி நடிகர் முத்துக்காளை எம் ஏ பட்டம் பெற்றார்.. மேற்படிப்பு படிக்கவும் முடிவு..

Comedy Actor Muththukkalai Finished MA tamil course

பொன்மனம் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் முத்துக்காளை. இவர் 8ம் வகுப்பு வரையில் படித்திருந்தார். சினிமாவில் ஸ்டன்ட் துறையில் சேரும் ஆசையுடன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கராத்தே கற்றுக்கொண்டு பிளாக் பெல்ட் வாங்கினார். பின்னர் சினிமா துறைக்குள் கஷ்டப்பட்டு நுழைந்தார். இயக்குனர் எள்.பி.ராஜ்குமார் அவரை பொன்மனம் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார்.


வடிவேலுவுடன் பல்வேறு படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். அவருடன் நடித்த செத்துச் செத்து விளையாடுவோமா, மூக்கு தொடும் காமெடி எனப் பல நகைச்சுவை காட்சிகளில் இவர் நடிப்பில் ஹைலைட் ஆனது. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.பள்ளியில் தனது குழந்தையைச் சேர்க்கச் சென்றபோது அம்மா, அப்பா டிகிரி படித்திருந்தால் தான் பிள்ளையைப் பள்ளியில் சேர்ப்போம் என்று கூறினர். 8ம் வகுப்பு மட்டுமே படித்த முத்துக்காளை படிக்க முடியாததை எண்ணி கண்கலங்கினார். அப்போது எடுத்த சபதத்தில் பி.ஏ படித்து முடித்து எம் பி தமிழ் மேற்பட்டப் படிப்பை படித்து முடித்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது.படிப்புக்கு வயதில்லை. எனக்கு 50 வயது ஆகிறது தற்போது எம் ஏ தமிழ் படித்து முடித்தேன் சில நாட்களுக்கு முன்புதான் அதற்கான சான்றிதழ் தமிழ்நாடு அரசு திறந்தவெளி பல்கலைக் கழகத்திலிருந்து வந்தது. அடுத்து எம்பில் மற்றும் பிஎச்டி மேற்படிப்பு தொடர இருக்கிறேன். பள்ளியில் என் குழந்தையைச் சேர்க்கச் சென்றபோது நீ டிகிரி படிக்கவில்லை பிள்ளைக்கு இடம் தரமுடியாது என்ற சொன்னபோது நான் அழுதேன் அந்த வைராக்கியத்தோடு எம் ஏ முடித்திருக்கிறேன்என்றார்.

You'r reading காமெடி நடிகர் முத்துக்காளை எம் ஏ பட்டம் பெற்றார்.. மேற்படிப்பு படிக்கவும் முடிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கங்கனா ரனாவத் மீண்டும் டைரக்டு செய்கிறார்.. தலைவி முடித்த கையோடு களம் இறங்க முடிவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்