பூஜா ஹெக்டேவின் வீரபத்ராசனா..

Pooja Hegde Splended Take-Off Yoga Pose

நடிகை பூஜா ஹெக்டே இந்தியில் நடித்திருந்தாலும் அவர் தெலுங்கில் அல வைகுந்தபுரமலு படத்தில் நடித்த பிறகு பிரபலமானார். ஹீரோ அல்லு அர்ஜூனுடன், புட்டா பொம்மா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை மயக்கியது. நடிகை சமந்தா அழகாக இல்லை என்று சமீபத்தில் பூஜா இன்ஸ்டாகிராமில் வெளியான மெசேஜால் சர்ச்சையில் சிக்கினார். தனது இன்ஸ்டாவை யாரோ ஹேக் செய்து இப்படி வெளியிட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அதன்பிறகு சில நாட்கள் இன்ஸ்டாகிராமில் எதுவும் பதிவு செய்யாமலிருந்தவர் தற்போது யோகாசனம் செய்யும் படத்தை வெளியிட்டிருக்கிறார்.வீரபத்ராசனா போஸ் தந்து தனது உடலை வில்லின் நாண் போல் வளைத்துச் சமநிலைப்படுத்தி நிற்பதை பார்க்கும் போது கொரோனா ஊரடங்கில் அவர் யோகா பயிற்சியில் தீவிரமாக இருந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

You'r reading பூஜா ஹெக்டேவின் வீரபத்ராசனா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒடிடியில் ஸ்ரீதேவி மகள் படம் ரிலீஸ்.. உண்மைக் கதையில் நடித்த ஜான்வி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்