முதல்வரை சந்தித்துப் படப்பிடிப்புக்கு அனுமதி பெற்ற சிரஞ்சீவி.. ஜூலை 15 முதல் ஹூட்டிங்..

Andhra CM YS Jagan Reddy allows shoots from July 15

கோலிவுட்டில் இன்னும் சினிமா படப்பிடிப்பு தொடங்காத நிலையில் இந்தி தெலுங்கு படப்பிடிப்பு தொடங்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.கடந்த இரண்டு தினத்துக்கு முன்பு தெலங்கானா முதல்வர் சந்திசேகராவை சிரஞ்சீவி தலைமையில் நாகார்ஜூனா, எஸ் எஸ். ராஜமவுலி உள்ளிட்ட படக் குழுவினர் சந்தித்தனர். இதையடுத்து அம்மாநிலத்தில் படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்தார் முதல்வர்.


இந்நிலையில் ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியைச் சிரஞ்சீவி தலைமையில் நாகார்ஜூனா, எஸ் எஸ். ராஜமவுலி, தில் ராஜு குழுவினர் நேற்று நேரில் சந்தித்து விசாகப்பட்டிணத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டனர். இதையடுத்து ஜூலை 15ம் தேதிமுதல் படப்பிடிப்பு நடத்த ஜெகன்மோகன் அனுமதி வழங்கினார்.
விசாகப்பட்டிணத்தில் சினிமா ஸ்டுடியோ அமைக்கவும். நடிகர் , நடிகைகள் குடியேறவும் அப்போது முதல்வர் அழைப்பு விடுத்தார்.

You'r reading முதல்வரை சந்தித்துப் படப்பிடிப்புக்கு அனுமதி பெற்ற சிரஞ்சீவி.. ஜூலை 15 முதல் ஹூட்டிங்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா பாதிப்பில் மேலும் ஒரு நடிகர் மரணம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்