விஷால், ஷ்ரத்தாவின் சக்ரா பட டீஸர் தயாராகிறது..

Chakra Movie Teaser release soon

நடிகர் விஷால் நடிக்கும் புதிய படம் 'சக்ரா'. விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் எழிலிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார்.

இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர். விஜயா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக் காட்சி அனல் அரசு, பிஆர் ஒ ஜான்சன்.

இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக்கட்டத்தில் நேரத்தில் கொரோனா கால பொது முடக்கத்தால் படப்பிடிப்பு தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பு நடைபெறும். இதற்கிடையில் டீஸர் பணி நடக்கிறது.
ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக இது உருவாகி வருகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

You'r reading விஷால், ஷ்ரத்தாவின் சக்ரா பட டீஸர் தயாராகிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிறவெறி: காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை.. கவிஞர் வைரமுத்து ஆவேச கவிதை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்