சிலைக்கு தரும் மரியாதை மனிதனுக்கு இல்லையே.. சர்ச்சையை கிளப்பும் டாப்ஸி ஊரடங்கு பதிவுகள்..

Tapsee pannu: pandemic worse than viral infection in India

அப்பாவி போல் ஆடுகளம் படத்தில் நடித்த ஹீரோயின் இப்படி கூட பேசுவாரா என்ற அளவுக்கு அதிரடியான வீடியோ மெசேஜை பகிர்ந்திருக்கிறார் நடிகை டாப்ஸி.பிரைவேஸி என்ற டைட்டி லுடன் விரியும் அந்த வீடியோ முழுவதும் கார்ட்டூன்கள் தான் ஓடுகின்றன ஆனால் ஒவ்வொன்றுக்கும் உயிர் உள்ளது.


இந்தியாவில் வைரஸ் கொடுமையால் ஊரடங்கு உள்ளது. இந்த நேரத்தில் சிலைகளுக்குத் தரும் மரியாதை கூட மனிதனுக்கு இல்லை என்று வீடியோவில் டாப்ஸியின் குரல் ஒலிக்கும்போது எல்லாமே மக்கள் கண்முன் நடந்த சம்பவங்கள் மனதுக்குள் நிழலாடுகிறது. ஊரடங்கால் வெளியூரில் சிக்கிக்கொண்ட மக்கள் கால்நடையாக ஊருக்குச் செல்கின்றனர். போலீசாரால் நடுவழியில் மக்கள் தாக்கப்படுவது, இறந்த தாய், கதறும் குழந்தை, வல்லபாய் பட்டேல் சிலை என அந்த வீடியோ நீள்கிறது. டாப்ஸியின் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை தானே உடற்பயிற்சி படத்தைப் போட்டோமா, கேக் செய்யும் படம் போட்டு லைக்கை அள்ளினோமா என்றில்லாமல் அவர் மக்கள் படும் அவதியை உன்னிப்பாக கவனித்து பகிர்ந்திருப்பது வழக்கத்தை விட அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது
காலத்துக்கும் இந்த காட்சிகள் நம்மை விட்டு மறையாது என அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் டாப்ஸியின் இந்த பதிவும் காலத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

You'r reading சிலைக்கு தரும் மரியாதை மனிதனுக்கு இல்லையே.. சர்ச்சையை கிளப்பும் டாப்ஸி ஊரடங்கு பதிவுகள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாரதிராஜா படங்களின் ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்