தமன்னாவுக்கு சவால் விட்ட ஸ்ருதி ஹாசன்..

Sruthi Haasan Throws Challenge To Milky Beauty Tamanna

நடிகர் அமிதாப்பச்சன் நடித்திருக்கும் குலாபோ சிட்டாபோ படம் ஒடிடி தளத்தில் வெளியானது. இப்பட ரிலீஸ் புரமோஷனுக்காக அமிதாப் பச்சன் நாக்கை தடுமாறச் செய்யும் ஒரு வசனத்தைச் சொல்லி இதை 5 முறை தவறில்லாமல் சொல்ல வேண்டும் என்றார். அந்த சவாலைஆயூஷ்மான் குரானா சரியாகச் செய்தார்.

அதேபோல் கரண்ஜோஹர், விராத் கோலி, அனுஷ்கா சர்மா, நேஹா துப்யா ஆகியோருக்கும் அமிதாப் சவால் விடுத்தார். அதை இவர்கள் ஏற்றுக்கொண்டு செய்ததுடன் நேஹா துப்யா இந்த சவாலை நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திருப்பி விட்டார்.நேஹாவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன் தனது தோழி நடிகை தமன்னா, நடிகர் ராணா, தங்கை அக்‌ஷரா ஹாசன் ஆகியோருக்கு விடுத்திருக்கிறார்.

You'r reading தமன்னாவுக்கு சவால் விட்ட ஸ்ருதி ஹாசன்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பரபரப்பான சுஷாந்த் சிங் கடைசி நிமிடங்கள்.. காலையில் ஜூஸ் குடித்தார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்