மாஜி காதல் நடிகருடன் நடிப்பாரா ராஷ்மிகா..

Will Rashmika Pair Up With Her Ex-Lover Rakshit?

நடிகை ராஷ்மிகா மந்தன்னா கன்னடத்தில் நடித்து வந்தார் பின்னர் தெலுங்கு படத்தில் நடிக்க வந்து பிரபலம் ஆனார். மகேஷ்பாபு, விஜய் தேவர்கொண்டா போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.தெலுங்கில் நடிக்க வரும் முன் கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் ரக்‌ஷித் செட்டியுடன் நடித்தார், அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் ரக்‌ஷித் ஷெட்டியுடன் காதலை பிரேக் அப் செய்து கொண்டு மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டினார் ராஷ்மிகா.


இந்நிலையில் ரக்‌ஷித், ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்த கிரிக் பார்ட்டி படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க அப்படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே காதல் முறிவில் இருக்கும் ராஷ்மிகா மீண்டும் ரக்‌ஷித் உடன் சேர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ராஷ்மிகா மாஜி காதலனுடன் இணைந்து நடிக்கச் சம்மதிப்பார் என்றே கூறப்படுகிறது.ராஷ்மிகா தற்போது கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன்க்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார்.

You'r reading மாஜி காதல் நடிகருடன் நடிப்பாரா ராஷ்மிகா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமன்னாவுக்கு சவால் விட்ட ஸ்ருதி ஹாசன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்