தேசிய விருது வென்ற மலையாள படத் தயாரிப்பாளர் காலமானார்..

Popular Malayalam film Producer dies at 83 in Kerala

மலையாளத்தில் 1972 ம் ஆண்டு திரைக்கு வந்த படம் சுயம்வரம், மது, சாரதா நடித்திருந்தனர். இப்படத்தை அடூர் கோபாலகிருஷணன் இயக்கி இருந்தார். சிறந்த படம் சிறந்த இயக்குனர். சிறந்த நடிகை. சிறந்த ஒளிப்பதிவு எனத் தேசிய விருதுகளை இப்படம் வென்றது. அதே போல் விருதுகளை வென்ற படம் கொடியேட்டம்.

இப்படங்களைத் தயாரித்தவர் குளத்தூர் பாஸ்கரன் நாயர். இவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 83. திருவனந்தபுரத்தில் குளத்தூர் பாஸ்கரன் நாயர் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமான அவர் மரணம் அடைந்ததையடுத்து மலையாள திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You'r reading தேசிய விருது வென்ற மலையாள படத் தயாரிப்பாளர் காலமானார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குஜராத் மாடல் அம்பலமானது.. ராகுல்காந்தி தாக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்