ராஷ்மிகாவுக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா?

Rashmika likes father than mother

விஜயதேவர கொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் தெலுங்கு படங்களில் நடித்தவர் ராஷ்மிகா. மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் ஜோடியாகவும் நடிக்கிறார் தமிழில் கார்த்தி ஜோடியாக விரைவில் அறிமுகமாகிறார்.ராஷ்மிகாவிடம், ' உங்களுக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? என்றால் அதற்குப் பதில் அளித்தார்.

நான் பிறப்பதற்கு முன்பே என்னை எப்படியெல்லாம் வளர்க்கவேண்டும் என்று என் அப்பா கற்பனை செய்து வைத்திருக்கிறார். பெண் குழந்தையென்றால் நீண்ட முடி இருக்க வேண்டும், கண்கள் பெரிதாக இருக்க வேண்டும், நடனம் கற்க வேண்டும் நன்கு படிக்க வேண்டும் என்று பல ஆசைகள். அப்பா என்ற முறையில் பாசம் காட்டினாலும் அதிகம் பேச மாட்டார். கண்டிப்புடன் இருப்பார். நான் எனக்குத் தேர்வு செய்வதை விட அவர் எனக்குச் சிறந்ததாகத் தேர்வு செய்வார்கள். அவருக்கு ஒரு தூண் போல் நான் இருப்பேன் எனக்கு அவர் அதேபோல் இருப்பார்.

என்னைவிட எனக்கு என்ன தேவை என்பது அவருக்கு நன்கு தெரியும். படிக்கும் காலத்தில் அவரை பிரிந்து ஹாஸ்டலில் தான் தங்கியிருந்தேன். என் மீதான பாசத்தை அவர் தனது செயல்பாடுகளில் காட்டுவார். அம்மா, அப்பா இரண்டு பேரும் பிடிக்கும். அதிகமாக யாரைப் பிடிக்கும் என்பதற்கு நான் என்ன சொல்வேன் என்பதை நீங்களே சொல்லுங்கள்
இவ்வாறு ராஷ்மிகா மந்தன்னா பதில் அளித்தார்.

You'r reading ராஷ்மிகாவுக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீரர்களின் தியாகத்தை தேசம் எப்போதும் மறக்காது.. ராஜ்நாத்சிங் பேட்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்