புதிய படம் கொரோனா குமார்.. ஹாலிவுட் பாணியில் உருவாகிறது..

Idharkuthane Aasaipattai Balakumara team is back with CORONA KUMAR

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை உலுக்கி இருக்கிறது. நம் மக்களின் வாழ்க்கையில் வழக்கத்துக்கு மாறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதை மையமாக வைத்து கொரோனா குமார் என்ற படம் உருவாகிறது.இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தை இயக்கிய இயக்குநர் கோகுல் நகைச்சுவை ததும்ப இப்படத்தை இயக்கவுள்ளார். லாக் டவுனில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாகிறது.


“ குமுதா ஹேப்பி அண்ணாச்சி” “மச்சி லவ் மேட்டர் பீல் ஆய்டாப்ள “ போன்ற காமெடி ட்ரெண்டிங் வசனங்கள் மூலம் பிரபலமான கோகுல். 'ரெளத்திரம்', 'காஷ்மோரா', 'ஜுங்கா' படங்களையும் இயக்கியவர். மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஹெலன் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார்.

கொரோனா குமார் படம் பற்றி கோகுல் கூறும்போது,இதற்குத் தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா' படக் கதாபாத்திரங்கள் ஒரு விஷயம் செய்ய முடிவெடுக்கும் போது ஊரடங்கு அறிவிக்கிறார்கள். பின்னர் நடக்கும் சம்பவங்களை வைத்து நகைச்சுவையாக இப்படம் உருவாகவிருக்கிறது.சமூக கருத்துள்ளதாகவும் இப்படம் இருக்கும் என்றார் கோகுல்.
சினிமா வாலா பிக்சர்ஸ் K.சதீஷ் தயாரிக்கிறார். ஹாலிவுட்டில் புகழ்பெற்ற SPINOFF ஜானரில் இப்படம் உருவாகும் முதல் தமிழ்த் திரைப்படமாக இது இருக்கும். மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

You'r reading புதிய படம் கொரோனா குமார்.. ஹாலிவுட் பாணியில் உருவாகிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மஞ்சுளா மகள் நடிகை வனிதா 3வது திருமணம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்