விஜய் பிறந்த நாளில் படம் ரிலீஸ்.. ரசிகர்கள் ஹேப்பி..

Thalapathy Vijays movie confirmed release

தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் முடிந்தும் கொரோனா தொற்று ஊரடங்கால்
வெளிவராமல் முடங்கி உள்ளது. ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளும் கொண்டாட முடியாத சூழல் உள்ளது. இதனால் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆனால் வெளி நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல நாடுகளில் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.


விஜய் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான 'பிகில்' படத்தை ரீரிலீஸ் செய்கின்றனர். ஜெர்மனி மற்றும் பிரான்சில் இப்படம் மீண்டும் விஜய் பிறந்த நாளில் வெளியாகிறது.
ஜெர்மனியில் சினிமாக்ஸ் மற்றும் பிரான்சில் கவ்மோன்ட் செயின்ட் டென்னிஸ் ஆகியவற்றில் ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை பிகில் திரையிடப்படுகிறது. அட்லீ இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. தந்தை, மகன் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசை. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு.

You'r reading விஜய் பிறந்த நாளில் படம் ரிலீஸ்.. ரசிகர்கள் ஹேப்பி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் கொரோனா பாதிப்பில் திடீர் சரிவு ஏன்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்