பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்.. நடிகை எம்.என்.ராஜம் கணவர்..

Actress M.N. Rajams husband singer A.L. Raghavan passes away

பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன். இன்று காலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது, உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. இவர் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் கணவர் ஆவார்.


ஏ.எல்.ராகவன் தனது இசைப் பயணத்தை 1947 ம் ஆண்டு தொடங்கினார். முத்து ராமன். தேவிகா நடிப்பில் வெளியான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம் பெற்ற எங்கிருந்தாலும் வாழ்க பாடலை பாடியவர் ஏ.எல்.ராகவன். மேலும் பாப்பா கதை கேளு, ஒன்ஸ் ஏ பாப்பா மெட் ஏ மாமா.., அங்கமுத்து தங்கமுத்து.. என்ன வேகம் நில்லுபாமா.. போன்ற பல பாடல்களையும் பாடியிருக்கிறார். 2014ம் ஆண்டு வெளியான ஆடாம ஜெயிச்சோ மடா படத்தில் சீன் ரோல்டன் இசையில் நல்லா கேட்பாக்கப் பாடம் என்ற பாடலும் ராகவன் பாடினார்.ராகவன் பாடகராக மட்டுமல்லாமல் பல படங்களிலும். அகல்யா போன்ற டிவி சீரியல்களிளும் நடித்திருக்கிறார்.

You'r reading பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்.. நடிகை எம்.என்.ராஜம் கணவர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வரும் 21ல் கங்கை அமரனை கவுரவிக்கும் இசை விழா.. டோக்கியோ தமிழ்ச் சங்கம் ஏற்பாடு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்