கைதி பட இயக்குனருடன் மீண்டும் இணையும் கார்த்தி..

Lokesh kanagaraj again directs Karthi movie

கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் முடிந்தும் கொரோனா ஊரடங்கால் திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது. அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க விருப்பதாகவும் தகவல் வெளியானது.


இதற்கிடையில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படம் முடித்தவுடன் லோகேஷ் படத்தில் ரஜினி நடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா லாக் டவுன் எல்லா திட்டங்களையும் முடக்கிப்போட்டுவிட்டது. எது எப்போது தொடங்கும் என்று கணிக்க முடியாத அளவுக்கு இடியாப்ப சிக்கலில் திரையுலகம் சிக்கிக்கொண்டிருக்கிறது.

எனவே ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆகிவிடும் என்று தெரிகிறது. இதற்கிடையில் மீண்டும் கார்த்தி நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளாராம். கைதி படத்தைத் தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பட நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்க உள்ளது.

You'r reading கைதி பட இயக்குனருடன் மீண்டும் இணையும் கார்த்தி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்.. நடிகை எம்.என்.ராஜம் கணவர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்