கமலைப் போலவே நடனம் ஆடி கவர்ந்த இளம் நடிகர்..

Kamal Haasan impressed By young actors dance on a treadmill

இயக்குனர் கார்த்திக் நரேனின் 'துருவங்கள் பதினாரு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் அஸ்வின் குமார், தனது நடன அசைவால் நெட்டிசன்களைக் கவர்ந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் 'அண்ணாத்த ஆடுறா ஒத்திக்க ' என்ற பாடலுக்கு நடிகர் கமல்ஹாசனைப் போலவே நடைப்பயிற்சி கருவியான ட்ரெட்மில்லில் நடனமாடி வீடியோ வெளியிட்டார் அஸ்வின் குமார்.


கமல்ஹாசனின் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தனர். மேலும் கமல்ஹாசனும் தம்ஸ் அப் எமோஜி வெளியிட்டிருக்கிறார்.மேலும், நான் செய்த நல்வினைகள் என் ரசிகரைச் சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! எனப் பாராட்டி இருக்கிறார் கமல்ஹாசன்.

You'r reading கமலைப் போலவே நடனம் ஆடி கவர்ந்த இளம் நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தற்கொலை செய்த நடிகரின் வாழ்க்கை படம்.. தூண்டியவர் விவரம் வெளிவருமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்