நடிகை வனிதா 3வது திருமணத்துக்கு 10 ஆயிரம் சதவீதம் ஆதரவு தந்த ரத்த சொந்தம்..

Daughter Supports Actress Vanitha Marriage

மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாக ரத்து செய்த நிலையில் டிவி டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை வரும் 27ம் தேதி 3வதாக திருமணம் செய்கிறார். இதற்கு நெட்டிஸன்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் வனிதாவின் திருமணத்துக்கு அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் ஆதரவு தெரிவித்து மெசேஜ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உன்னை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். என்ன நடந்தாலும் நான் உனக்கு ஆதரவாகத் தான் இருப்பேன். உன்னிடமிருந்து தான் எல்லாவற்றையும் நான் கற்றுக் கொண்டேன். மேலும் 15 வருடமாக உன்னுடன் நான் சாதனையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். இருவரும் சேர்ந்து பல்வேறு கடுமையான சூழல்களைச் சந்தித்திருக்கிறோம். எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கிறது.

என்னை விட உன்னைப் பற்றி வேறு யாருக்கும் தெரியாது. நீ மிகவும் அன்பானவர், பாசமுள்ளவர். உன்னுடைய இஷ்டம் போல் உன் வாழ்கையை நீ வாழலாம். அதில் எந்த தவறும் இல்லை. உன்னை நான் நேசிக்கிறேன். உனக்கு என்னுடைய ஆதரவு 10000 சதவீதமிருக்கிறது. நீ கடுமையான உழைப்பாளி, அருமையானவர், அதை என்றைக்கும் மறந்துவிடதே. மற்றவர்கள் எவ்வளவு சந்தோஷத்துக்கு உரியவர்களோ அதே அளவுக்குச் சந்தோஷமா இருக்க நீயும் தகுதியானவர். ஒரு மகளாக, ஒரு தோழியாக இதைச் சொல்கிறேன்.
இவ்வாறு ஜோவிகா கூறி உள்ளார்.

You'r reading நடிகை வனிதா 3வது திருமணத்துக்கு 10 ஆயிரம் சதவீதம் ஆதரவு தந்த ரத்த சொந்தம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆபாச நடிகையின் திடீர் ஆவேசம்.. இந்தியனாக இருந்தால் என் பக்கத்துக்கு வராதீர்கள்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்