நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?

Is Vignesh shivan and Nayanthara are affected in Coronavirus

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் பரவியது.அதனால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் கூறப்பட்டது. இது குறித்து விக்னேஷ் சிவன், நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


கொரோனா ஊரடங்கு முதலே இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். முன்னதாக ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கூட நயன்தாரா தனிமை விலகலை கடைபிடித்தார். தற்போதும் அவர் தனிமை கடைபிடித்து வருகிறார்.அதே போல் விக்னேஷ் சிவனும் தான் செய்யும் வெப் சீரிஸ் ஒன்றுக்காக தனிமைப்படுத்திக் கொண்டு தான் பணியாற்றி வருகிறார். இருவரும் உடல் நலத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றனர்.

You'r reading நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இது ஒரிஜினல் சிக்ஸ் பேக்.. தனுஷ் ரசிகர்கள் ஆரவாரம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்