இன்று ஒரு நாள் ரசிகையாக மாறிய நடிகை,, விஜய்க்கு வித்தியாசமான வாழ்த்து..

Popular Heroine Kalyani Turns As Vijay Fan

தளபதி விஜய்க்கு இன்று 46வது பிறந்ததினம் அவருக்கு ரசிகர்கள். நடிகர், நடிகை, இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு நடிகை இன்று ரசிகையாக மாறி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.பிரபல நடிகை லிசி. இவரது மகள் கல்யாணி. இவர் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிப்பதுடன் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அவர் டிவிட்டரில் விஜய்க்குத் தெரிவித்த பிறந்தாள் வாழ்த்தில்,வழக்கமாக ஒரு நடிகையாகத் தான் நான் டிவிட்டரில் மெசேஜ் பகிர்வேன் ஆனால் இன்று முழுக்க ஒரு ரசிகையாக மாறி விஜய்சாருக்கு வாழ்த்து பகிர்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளபதி எனத் தெரிவித்திருக்கிறார் கல்யாணி.

You'r reading இன்று ஒரு நாள் ரசிகையாக மாறிய நடிகை,, விஜய்க்கு வித்தியாசமான வாழ்த்து.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுஷாந்த் சிங் தற்கொலையில் திடீர் திருப்பம்.. காதலி மீது வழக்கு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்