107 வயது நடிகர், பாடகர் பப்புக்குட்டி பாகவதர் காலமானார்.. முதல்வர் இரங்கல்..

Malayam Veteran actor and singer Pappukutty Bhagavathar dies at 107 in Kerala

நூறாண்டு காலம் வாழ்க என்ற பாடல் கேட்டிருக்கிறோம் ஆனால் 100 ஆண்டுகள் வாழும் கலைஞர்களைக் காண்பது அரிதிலும் அரிது. மலையாள நடிகர் மற்றும் பாடகருமான பப்புக்குட்டி பாகவதர். இவருக்கு 107 வயது. நேற்று இரவு கேரளாவின் கொச்சியில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு காரணத்தால் மரணம் அடைந்தார். அவரது மறைவு பற்றி அறிந்ததும் மலையாள நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் பப்புக்குட்டி பாகவதர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்“பப்புக்குட்டி பாகவதர் மலையாள சினிமாவில் சிறுவயது கலைஞராக வாழ்கையைத் தொடங்கி, பின்னர் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக சினிமா மற்றும் நாடகத் துறையில் ஒரு நடிகராகவும் பாடகராகவும் செயல்பட்டார். அவரது பங்களிப்புகளைக் கேரளா எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ”என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.பப்புகுட்டி பாகவதர் 25க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். மலையாள படங்களில் ஒரு பகுதியாக இருந்தார். விருத்தன் ஷங்கு, காட்டுக்குரங்கு, படிச்ச கள்ளன், விலைகுறைஞ்ச மனுஷ்யர் போன்ற படங்களில் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்.

மேரிக்குண்டோரு குஞ்சாடு படத்தில் என்டடுகே வன்னடுகம் என்ற அவர் பாடிய பாடல் பெரும் வெற்றியைப் பெற்றது. நாடகக் கலைஞராக இருந்த இவர் கேரளாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நாடகங்கள் நடத்தி இருக்கிறார்.மைக்கேல் மற்றும் அண்ணா தம்பதியின் 2வது குழந்தையாகக் கடந்த 1913 இல் பிறந்த பப்புக்குட்டி பாகவதர் பிறந்தார். இவரது மனைவி பேபி கடந்த 2017 ஆண்டில் மரணம் அடைந்தார்.

You'r reading 107 வயது நடிகர், பாடகர் பப்புக்குட்டி பாகவதர் காலமானார்.. முதல்வர் இரங்கல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோதல் நடக்கும் போது பிரதமர் மோடியை சீனா ஏன் பாராட்டுகிறது? ராகுல்காந்தி கேள்வி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்