ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஸ்டீவ் பிங் 27வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை.. மன அழுத்தம் காரணம்..

Hollywood producer Steve Bing Suicide

பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஸ்டீவ் பிங். டாம் ஹாங்க்ஸ் படங்களுக்கு முதலீடு செய்தவர். நடிகை லிஸ் ஹர்லியுடன் ஒரு குழந்தையைப் பெற்றார்.55 வயதாகும் ஸ்டீவ் கடந்த சில காலமாக மன அழுத்தத்திலிருந்தார்.இந்நிலையில் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸின் நூற்றாண்டு நகரத்தில் ஒரு சொகுசு அடுக்குமாடி கட்டிடத்தின் 27வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவலை அமெரிக்கப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.


சில்வெஸ்டர் ஸ்டாலோனின் அதிரடி படமான கெட் கார்ட்டர் மற்றும் மார்ட்டின் ஸ்கோர் செஸியின் இசை ஆவணப்படம் ஷைன் எ லைட் போன்ற திரைப்படங்களுக்கு இவர் பைனான்ஸ் செய்திருக்கிறார்.முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில்கிளின்டனின் ஆதரவாளராக இருந்தார்.18 வயதில், பிங் தனது தாத்தா லியோ எஸ் பிங்கிடமிருந்து சுமார் 600 மில்லியனைப் சொத்தாகப் பெற்றார், பிங்கிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

You'r reading ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஸ்டீவ் பிங் 27வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை.. மன அழுத்தம் காரணம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மளிகை கடை ஓனர் ஆனார் திரைப்பட இயக்குனர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்