30 கிலோ எடை குறைத்த நடிகை..

Vidyulekha Raman Losing more than 30 kgs Body Weight

கவுதம் மேனன் இயக்கிய நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் வித்யுலேகா மோகன். இவர் குணசித்ர நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார். பல படங்கள் குண்டான தோற்றத்தில் நடித்து வந்தார் வித்யூ லேகா. ஒரு கட்டத்தில் உடல் தோற்றத்தை ஒல்லியாக்க எண்ணினார். ஆனால் அது சாத்தியமா என்று அவரிடம் தோழிகள் கேட்டனர். அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்தினார். தினமும் உடற்பயிற்சி சீரான உணவு முறையைக் கையாண்டு 30 கிலோ எடை குறைத்திருக்கிறார்.


இது குறித்து அவர் கூறும்போது.என்னால் உடல் எடை குறைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டேன். அதன்படி கடுமையான உடற்பயிற்சி, சமனிலை உணவு மேற்கொண்டேன். எனது உண்மையான நம்பிக்கை, கடுமையான உழைப்பு,சிந்திய வியர்வை எதுவும் வீணாகவில்லை. இதற்காக உடல் எடை குறைப்பு மாத்திரை எதையும் நான் பயன்படுத்தவில்லை. தற்போது 68 கிலோ இருக்கிறேன். இது இன்னும் குறையும். என்றார் வித்யுலேகா.

You'r reading 30 கிலோ எடை குறைத்த நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தனுஷ் பட தழுவலில் கீர்த்தி சுரேஷ்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்