தனியார் பள்ளியில் இலவச கல்வி.. நடிகர் சித்தார்த் தகவல்..

Free Education in private School :Actor Siddarth

நடிகர் சித்தார்த் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நாம் எல்லோருமே நம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் நல்ல எதிர்காலம் அமையத் தரமான கல்வி முக்கியம் உங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைக்க வாய்ப்பிருக்கிறது.


ரைட்ஸ் டு எஜுகேஷன் ஆக்ட் அதாவது இலவச கல்வி சட்டம். இந்த சட்டம் மூலமாகத் தனியார் பள்ளியில் உங்கள் குழந்தைகளை இலவசமாகப் படிக்க வைக்க முடியும். உங்கள் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால், உங்க வீட்டில் மூணுலிருந்து நான்கு வயசுக்குள் குழந்தைகள் இருந்தால் www.ilavasakalvi.in என்ற மெயிலுக்கு அல்லது 8144224444 என்ற எண்ணுக்கு மிஸ்ட்டு கால் கொடுங்க.

இந்த விஷயத்துல இதுக்கு மேல நீங்க எதுவுமே செய்ய வேண்டாம். பூமி என்கிற ஒரு என் ஜி ஓ இருக்கு அதில் என் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் குழந்தையைப் பள்ளியில் சேர்க்க உங்கள் கூடவே இருந்து உதவுவார்கள். இதை இன்னும் நிறைய பேருக்கு ஷேர் செய்யுங்கள்
இவ்வாறு சித்தார்த் கூறி உள்ளார்.

You'r reading தனியார் பள்ளியில் இலவச கல்வி.. நடிகர் சித்தார்த் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஊமைவிழிகள் படப் புகழ் எடிட்டர் மாரடைப்பில் மரணம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்