விஜய் படத்தை தவறவிட்டது பற்றி டிவிட்டரில் சேரன் வருத்தம்..

Director Cheran missed Chance To Direct Thalapathy Vijay

நடிகர் விஜய் கால்ஷீட் கிடைக்காதா என்று பல இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் கால்ஷீட் கிடைக்கவிருந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் சேரன். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதி இருப்பதாவது:பிரார்த்னா தியேட்டரில் படம் பார்த்து விட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது. அதற்குப் பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார். நான் தான் தவமாய் தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.


அந்த தவறை நான் செய்திருக்கக் கூடாது. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன். இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களைப் பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன். ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன். அவரிடம் ஆட்டோ கிராஃப் கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது.

ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்துக் கதை கேட்ட அந்த தன்மை. வாவ்... கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும் தான். அவ்வளவு டெடிகேஷன். அதுவே இன்று அவரின் உயரம்.
இவ்வாறு சேரன் கூறி உள்ளார்

You'r reading விஜய் படத்தை தவறவிட்டது பற்றி டிவிட்டரில் சேரன் வருத்தம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தனியார் பள்ளியில் இலவச கல்வி.. நடிகர் சித்தார்த் தகவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்