யோகா செய்ய துணை சேர்த்த சமந்தா..

Samantha performed the Seersha Aasan with her husband

நடிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் தன்னை சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்துக்கொள்ள மாடித் தோட்டம் பராமரிப்பு, நீச்சல், உடற்பயிற்சி எனப் பலவற்றில் பிஸியாக இருக்கிறார். தற்போது கூடுதலாக யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்திருக்கிறார்.

இதற்காக யோகா பயிற்சியாளர் அவரது வீட்டுக்கே வந்து பயிற்சி அளிக்கிறார். தனியாகப் பயிற்சி செய்துகொண்டிருந்த அவருடன் கணவர் நாக சைதன்யாவும் பயிற்சியில் இணைந்திருக்கிறார். இருவரும் போட்டிப் போட்டு பயிற்சி செய்கின்றனர்.நேற்று எந்த பிடிமானமும் இல்லாமல் தலைகீழ் நிற்கும் சிரஸாசனா பயிற்சியை இருவரும் செய்தனர். முதல் முயற்சியிலேயே இருவரும் அதைச் சரியாகச் செய்து அசத்தினர். இருவரும் விரைவில் யோகா எக்ஸ்பெர்ட் ஆகிவிடுவோம் என்கின்றனர்.

You'r reading யோகா செய்ய துணை சேர்த்த சமந்தா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அனைத்து கட்சிக் கூட்டம் எதற்கு? எடப்பாடி பழனிசாமி கேள்வி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்