ராஜமவுலிக்காக பகத்சிங் ஆகும் பிரபல ஹீரோ..

Ajay Devgn To Play Bhagat Singh In Rajamoul Film

பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். ராம்சரண். ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கும் படம் சுதந்திர போராட்டத்துக்கு முந்தைய கதையாக உருவாகிறது.வெள்ளையர்களை எதிர்த்து போராடிய ராம ராஜூ, பீம் ஆகிய பாத்திரங்களில் முறையே சரண், என் டி ஆர் நடிக்கின்றனர்.

இதில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் நடிக்கிறார். என்ன கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸாக இருந்தது. அவர் பகத்சிங் வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. சுதந்திர போராட்டத்தின் போது வட இந்திய போராளிகள் தென்னிந்தியப் போராளிகளுடன் கைகோர்த்திருந்தனர்.

அந்த வகையில் பகத்சிங் பாத்திரம் ராம் சரண். ஜுனியர் என்டிஆர் பாத்திரங்களுக்கு குருவாகப் படத்தில் இடம் பெறுகிறதாம். அஜய்தேகன் ஏற்கனவே ஒரு படத்தில் பக்த சிங் வேடம் ஏற்று நடித்திருந்ததால் இப்படத்திலும் அவரை பகத்சிங் வேடத்திற்கு ராஜமவுலி தேர்வு செய்தார் எனக் கூறப்படுகிறது.

You'r reading ராஜமவுலிக்காக பகத்சிங் ஆகும் பிரபல ஹீரோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கவர்ச்சி யோகாவில் இளசுகளை வளைக்கும் நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்