காவல் துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்கு வேதனை அடைகிறேன்.. சிங்கம் பட டைரக்டர் ஹரி கோபம்..

Singam Movie Director Hari Condemned saathankulam Incident

சாத்தான்குளம் தந்தை, மகன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடித்துக் கொல்லப்பட்டனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று திரையுலகினர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


போலீஸாரை பெருமைப்படுத்தும் வகையில் சிங்கம் படத்தை மூன்று பாகம் இயக்கிய டைரக்டர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல் துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது. காவல் துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்.இவ்வாறு டைரக்டர் ஹரி தெரிவித்திருக்கிறார்.

You'r reading காவல் துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்கு வேதனை அடைகிறேன்.. சிங்கம் பட டைரக்டர் ஹரி கோபம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோப்ராவிலிருந்து நாளை ஏ.ஆர். ரஹ்மானின் தும்பி துள்ளல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்