ஒடிடி தளத்துக்கு வருகிறது வாணிபோஜன் படம்.. ஜோதிகா, கீர்த்தியை பின்தொடரும் நடிகை..

Actress Vani Bhojan film LOCkUP On OTT Release

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் ஆகிய படங்கள் ஏற்கனவே ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அடுத்து யோகிபாபுவின் காக்டெய்ல் (ஜூலை 10-ந் தேதி) வரலட்சுமி சரத்குமாரின் டேனி (ஆகஸ்ட் 1-) படங்கள் ஒடிடியில் நேரடியாக வெளியாகிறது. அவர்களைத் தொடர்ந்து டிவி புகழ் வாணிபோஜன் நடித்திருக்கும் படம் லாக்கப் ஒடிடியில் வெளியாக உள்ளது. இப்படத்தை எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் பணியாற்றியவர்.

லாக்கப் படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார், இயக்குனர் வெங்கட் பிரபு போலீஸாக மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் ஜூலை மாதம் ஜீ5 ஒடிடியில் வெளியாகப் பேச்சு நடக்கிறதாம்.

You'r reading ஒடிடி தளத்துக்கு வருகிறது வாணிபோஜன் படம்.. ஜோதிகா, கீர்த்தியை பின்தொடரும் நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதும் தீர்ப்பு.. கவிஞர் வைரமுத்து கேட்கும் நீதி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்