ரஜினியின் காலா நடிகை ஷாக்.. 700 சதவீதம் மின்கட்டணம்..

Heavy Electric Bill charge :Actress Humaa Shock

கொரோனா ஊரடங்கால் எல்லோரையும் வீட்டில் முடக்கிப் போட்டிருக்கிறது அரசு. மின்சார கட்டண விவகாரம் தற்போது எளியவர்கள் முதல் பிரபலங்கள் வரை திடுக்கிட வைத்திருக்கிறது. கடந்த 4 மாதமாக மின் மீட்டர் ரீடிங் எடுக்காத நிலையில் கடந்த மாத கட்டணத்தைக் கட்டலாம் என அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. பலரும் அதை ஏற்றுக் கடந்த மாதம் கட்டணத்தைக் கட்டினார்கள். ஆனால் திடீரென்று மின் மீட்டர் அளவை எடுத்து தாறுமாறாகக் கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினியுடன் காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷு மும்பையில் வசிக்கிறார். அவரது வீட்டுக்கு மின்கட்டணமாக ரூ. 50, 000 கட்டணம் வந்திருக்கிறதாம். வழக்கமாகத் தனது வீட்டுக்கு மாதம் 6 ஆயிரம் பில் வரும் என்ற நிலையில் இந்த முறை எந்த அளவை வைத்து 700 மடங்கு அதிகமாகக் கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று குமுறியிருக்கிறார் ஹூமா குரோஷி. இது குறித்து மும்பை அரசுக்கு அவர் புகார் அளித்திருக்கிறார்.
நடிகர் பிரசன்னா, நடிகைகள் டாப்சி, கார்த்திகா நாயர் போன்றவர்கள் அதிக மின் கட்டண விதிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே புகார் அளித்திருக்கின்றனர்.

You'r reading ரஜினியின் காலா நடிகை ஷாக்.. 700 சதவீதம் மின்கட்டணம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகைகள் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் மோதல்.. போதும் இத்தோடா நிறுத்திக்குவோம் சண்டை முற்றியதும் கப்சிப்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்