அண்ணாத்த, வலிமை பட ஷூட்டிங், ரஜினி, அஜீத் புது முடிவு..

Rajinikanth, Ajiiths Annaththe and Valinai not to resume shooting in 2020 due to COVID-19

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தைச் சிவா இயக்குகிறார். அஜீத் நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படங்களை தீபாவளியொட்டி வெளியிடும் திட்டத்துடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வந்தது. கொரோனா தொற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பை தொடங்க எண்ணியிருந்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த், அண்ணாத்த படப்பிடிப்பை அடுத்த வருடத்துக்கு (2021 )தள்ளி வைக்கும்படி கேட்டிருக்கிறாராம். படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் இவ்வாறு கூறியிருக்கிறாராம். இதனால் பொங்கல் பண்டிகையைத் தாண்டியே அண்ணாத்த படம் வெளியாகும் என்று தெரிகிறது. அதேபோல் வலிமை படப் பிடிப்பையும் தள்ளிவைக்க அஜீத் தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறாராம்.

You'r reading அண்ணாத்த, வலிமை பட ஷூட்டிங், ரஜினி, அஜீத் புது முடிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தந்தை மகன் கொலை: அரசுக்கு பாரதிராஜா எச்சரிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்