ஒடிடி தளத்துக்கு வரும் பிரபல நடிகர், நடிகை மகள் படம்..

Rajasekar-Jeevitha Daughters Film To Stream On OTT Soon

தமிழ், தெலுங்கில் நடித்த பிரபல நட்சத்திர ஜோடி டாக்டர் ராஜசேகர், ஜீவிதா. இவர்களின் மகள் ஷிவாமிகா. இவர் தொரசானி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். படம் பெரிய அளவில் அவருக்குக் கைகொடுக்கவில்லை. தற்போது புதிய படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கி வேகமாகப் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். தியேட்டர்கள் திறப்புக்காகக் காத்திருக்காமல் நேரடியாக ஒடிடி தளத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.நடிகை ஜீவிதா தமிழில் வளைகாப்பு, தப்புக்கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இது தான்டா போலீஸ் உள்ளிட்ட பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார் டாக்டர் ராஜசேகர்.

You'r reading ஒடிடி தளத்துக்கு வரும் பிரபல நடிகர், நடிகை மகள் படம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிறுமி பலாத்காரம்: அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள்.. வரலட்சுமி சரத்குமார் ஆவேசம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்