உடலில் வெயிட் போட்டதை கிண்டல் செய்தார்கள்.. நடிகை நித்யா மேனன் வருத்தம்..

Actress Nithya Menen opens up on body-shaming

மெர்சல், ஒ.கே கண்மணி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். தற்போது பிரீத்: இன் டு தி ஷேடோஸ் என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். அவரை பலரும் உடல் தோற்றம் குண்டாக இருப்பதாகக் கிண்டல் செய்தனர். அது குறித்து அவர் கூறும்போது.எனது உடல் தோற்றம் குண்டாக இருப்பதாகப் பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.

அது போல் விமர்சனத்தை முன்பு நான் எதிர் கொண்டதில்லை. அவர்கள் யாருமே ஒருவரின் உடல்வாகு பற்றிப் புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொருவருக்கும் உடல்வாகு என்பது வேறுவேறாக இருக்கும். அது அவர்களின் வாழ்க்கை முறையைப் பொருத்தும் மற்ற காரணங்களாலும் அமைகிறது. இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்கள் பற்றிப் பேசுவதை நான் தவிர்க்கிறேன். ஆனால் என்ன விமர்சனம் வந்தாலும் நல்ல கதைகளில் நடிப்பதையே நான் விரும்புகிறேன்.தற்போது நடிக்கும் பிரத்: இன் டு தி ஷேடோஸ் வெப் தொடர் முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பாக இருக்கும்.
இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

You'r reading உடலில் வெயிட் போட்டதை கிண்டல் செய்தார்கள்.. நடிகை நித்யா மேனன் வருத்தம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா சிகிச்சை.. அதிக லேப்களுக்கு அனுமதி தர முடிவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்