நடிகர் கதிர் தந்தைக்கு வாய்ப்பு தந்த விஜய்.. 53 வருட நடிகர் கனவு நிறைவேறியது..

Bigil Actor Kathir Father become an actor

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் பின்னர் விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட கோச்சராகவும் விஜய்யின் நண்பராகவும் நடித்திருந்தார்.கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை மற்றும் தாயார் படத்தை வெளியிட்டு, எனது பெற்றோரின் வாழ்க்கை பயணம் தான் எனக்கு முன்னுதாரணம். அவர்களது லட்சியம், கனவு அதுதான் தற்போது நான் இருக்கும் இடம் (நடிகர்).

நடிக்க வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு. 53 வருடங்களுக்குப் பிறகு எனது அப்பாவின் கனவு நிறைவேறி இருக்கிறது. மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அவர் நடித்துள்ளார். இது அவரது ஆசையை நிறைவேற்றியிருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. நீங்கள் கண்ட கனவு நிறைவேறியதை எண்ணி மகிழ்ச்சி அடையும் நேரம் இது.லவ் யூ எனக் குறிப்பிட்டிருக்கிறார் கதிர்.

You'r reading நடிகர் கதிர் தந்தைக்கு வாய்ப்பு தந்த விஜய்.. 53 வருட நடிகர் கனவு நிறைவேறியது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குறோம்.. பாடகி சின்மயி வேதனை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்