ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு.. பிரண்ட்ஷிப் படத்தில் மலர்ந்தது நட்பு..

Actor Simbu song for Harbhajan Singh

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முழுநேர நடிகராகிவிடுவார் போலிருக்கிறது. ஏற்கனவே டிக்கிலோனா படத்தில் சந்தானம் உடன் இணைந்து நடிக்கிறார்.தற்போது ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் "பிரண்ட்ஷிப் " படத்தில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார்.ஷேண்டோ ஸ்டுடியோ மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் , லாஸ்லியா, சதீஷ் , ஜேஎஸ்கே சதீஷ்குமார், வெங்கட் சுபா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .

இப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவராக நடிக்கும் ஹர்பஜன் தீவிர ரஜினிகாந்த் ரசிகர். தற்போது இப்படத்தின் " Superstar anthem " என்ற முதல் பாடலை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார் . அறிமுக இசை அமைப்பாளர் டி,எம். உதயகுமார் இசையமைத்துள்ளார்.சிம்பு தொலைப்பேசியில் ஹர்பஜனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . மேலும் பாடல் சிறப்பாக உருவாகியிருக்கிறது , திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என வாழ்த்தியுள்ளார் .இதற்குப் பதிலளித்த ஹர்பஜன் " எனக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பனாகக் கிடைத்துள்ளீர்கள் . சென்னையில் நாம் இருவரும் விரைவில் சந்திப்போம்"எனக் கூறியுள்ளார் .பிரண்ட்ஷிப் திரைப்படம் இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது .இப்படத்தின் இணைத்தயாரிப்பு:வேல்முருகன். ஒளிப்பதிவு:சாந்த குமார். இசை - டி,எம்.உதயகுமார். படத்தொகுப்பு - தீபக் எஸ். தவாரக்நாத். கலை மகேந்திரன். வசனம் பிஎஸ்.ராஜ். நிர்வாக தயாரிப்பு - ரோபின்.

You'r reading ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு.. பிரண்ட்ஷிப் படத்தில் மலர்ந்தது நட்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் கதிர் தந்தைக்கு வாய்ப்பு தந்த விஜய்.. 53 வருட நடிகர் கனவு நிறைவேறியது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்