டான்ஸ் மாஸ்டருக்கு நடிகை அதிதி ராவ் வாழ்த்து..

Actress Aditi congratulate Dance Master LalithaShobi

எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி. திரையுலகில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் ஷோபி பவுல்ராஜ். அவரது மனைவி லலிதா ஷோபி. உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், தளபதி விஜய் நடித்த பிகில், சியான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான், ஜோதிகா நடித்த 36 வயதினிலே உள்ளிட்ட பல படங்களிலும் மேலும் பல பிறமொழி படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் லலிதா ஷோபி.

சமீபத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய `சுஃபியும் சுஜாதாயும்' மலையாள திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. நரணிபுழா ஷான வாஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சுஃபியும் சுஜாதாவும்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இப்படத்தில் பணியாற்றியது தனக்கு மிகவும் பெருமையளிப்பதாகவும் கூறியுள்ளார். நடன இயக்குனர் லலிதா ஷோபி. அவருக்குப் பட ஹீரோயின் அதிதி ராவ் ஹைத்ரி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார்.

You'r reading டான்ஸ் மாஸ்டருக்கு நடிகை அதிதி ராவ் வாழ்த்து.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு.. பிரண்ட்ஷிப் படத்தில் மலர்ந்தது நட்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்