சமந்தாவின் ஒரு நாள் கொண்டாட்டம்.. புயலுக்கு பின்னே அமைதி..

Actress Samantha celebrates 1 year of Oh Baby

ஒரு வருடத்துக்கு முன் நடிகை சமந்தாவின் மனது புயலில் சிக்கியது போல் தவித்தது. அவர் மிகவும் விருப்பப்பட்டு நடித்த ஓ! பேபி என்ற படம் வெளியானது. அப்படத்தை விமர்சகர்கள் கிழி கிழியென்று கிழித்தார்கள். இதுதான் சமந்தாவின் தவிப்புக்குக் காரணம். அதையெல்லாம் மீறி அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது புயலுக்குப் பின்னே அமைதி என்பது போல் மகிழ்ச்சியை அமைதியாகக் கொண்டாடுகிறார் சமந்தா.


இதுபற்றி சமந்தா இன்ஸ்டாகிராமில் எழுதியிருப்பதாவது:நான் மிகவும் விரும்பி நடித்த ஓ! பேபி படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. இந்த நாளை நான் முழுவதுமாக மகிழ்ச்சியாக கொண்டாடுகிறேன். அப்படம் வெளியான போது நிமிடத்துக்கு நிமிடம் நெகடிவாகவே விமர்சனங்கள் வந்தன. இதில் அப்செட் ஆகி அந்த விமர்சனங்களை பட இயக்குனர் நந்தினி ரெட்டிக்கு அனுப்பி அவரை ஒரு வழியாக்கி விட்டேன். அவர் என் தோழி தான் என்றாலும் நான் அனுப்பும் தகவல்களால் கடுப்பாகி என்னை இன்ஸ்டாவில் அன்பிரண்ட் செய்துவிடுவார் என்று எண்ணினேன். அப்படி எதுவும் செய் வில்லை. பிறகு அப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அன்றைக்கு நந்தினிக்கு நான் செய்த தொல்லைக்கு மன்னிப்பு கேட்கிறேன். எனது படங்களில் நான் பெருமை கொண்ட படமாக அமைந்தது ஓ! பேபி. அதற்கு நந்தினி ரெட்டிக்கு நன்றி சொல்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார் சமந்தா.
ஓ! பேபி பட ஒரு வருட கொண்டாட்டத்துக்காக சமந்தா ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டரை சமந்தா தனது இணைய தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

You'r reading சமந்தாவின் ஒரு நாள் கொண்டாட்டம்.. புயலுக்கு பின்னே அமைதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமா..? கிளாமர் ஹீரோயின் பதில்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்