மலேசியாவில் அஜீத்-நயன்தாரா, ஜெயம் ரவி-காஜல் படங்கள் ரீ ரிலீஸ்.. தியேட்டரில் இலவசமாக பார்க்கலாம்..

Viswasam and Comali to re-release in Malaysia

இந்தியா, அமெரிக்க, உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு போகும் நிலையில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, துபாய், மலேசியா, பிரான்ஸ் மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. இதையடுத்து அந்நாடுகள் சகஜ நிலைக்குத் திரும்புகின்றன.​​குறிப்பிட்ட நாடுகளில் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படவிருக்கின்றன. மலேசியத் திரையரங்குகளில் நாளை (ஜூலை 9 ஆம்) தேதி தல அஜீத்தின் விஸ்வாசம் மற்றும் ஜெயம் ரவியின் கோமாளி ஆகியவை படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

விஸ்வாசம் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படத்தைச் சிவா இயக்கி உள்ளார். கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார்.மலேசியாவில் உள்ள லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் (எல்எஃப்எஸ்) சினிமா திரைகள் இப்படங்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளன. விஸ்வாசம்,கோமாளி இலவசமாகத் திரையிடப்படுகின்றன."லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் இலவச ஸ்கிரீனிங் மூலம் மீண்டும் அஜீத்தின் விஸ்வாசம், ஜெயம் ரவியின் கோமாளி கொண்டாட்டத்தில் ஆழ்த்த வருகின்றன " என லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதைக்கண்டு மலேசிய சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

You'r reading மலேசியாவில் அஜீத்-நயன்தாரா, ஜெயம் ரவி-காஜல் படங்கள் ரீ ரிலீஸ்.. தியேட்டரில் இலவசமாக பார்க்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டாப்ஸியின் துணிச்சலுக்கு நடிகை பாராட்டு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்